யாரும் அறிந்திடாத சோமாலியாவின் வரலாறு - மஹா பஞ்சத்திற்கான காரணம் என்ன?
உலகின் ஏழை நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில உள்ள நாடுதான் சோமாலியா. நமக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்தே மாபெரும் பஞ்சத்தில் அடிபட்டு சின்ன பின்னமான நாடு.
ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்கில் இந்திய பெருங்கடலையும், ஏமன் வளைகுடாவையும் எல்லையாக கொண்ட நாடுதான் இந்த சோமாலியா.
இதனை முற்காலங்களில் ஆப்பிரிக்காவின் கொம்பு என அழைத்தனர்.
சோமாலியாவை சுற்றி எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் அண்டை நாடுகளாக உள்ளன.
தொடக்க காலத்தில் சுல்தான்களின் கட்டுப்பாட்டில் இருந்தபோது சோமாலியா மிகவும் செல்வா செழிப்பாக இருந்தது.
19 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சோமாலியாவின் ஒரு பகுதியை பிரிட்டனும், மற்றொரு பாதியை இத்தாலியும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருந்தன.
நீண்ட சுதந்திர போராட்டத்திற்கு பிறகு சோமாலியா ஜூன் 1, 1960 ஆம் ஆண்டு சுதந்திரம் சுதந்திரம் பெற்று குடியரசு நாடாக மாறியது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சோமாலியாவின் முதல் அதிபரானார் "ஆதன் அப்துல் உஸ்மான் தார்" (1960 - 1967). இவர் நல்லாட்சி புரிந்து கொண்டிருந்தார்.
அக்காலகட்டம் சோமாலியாவின் பொற்காலம் ஆகும். அந்த நாட்டின் முதுகெலும்பாக விவசாயமும், கால்நடை வளர்ப்பும், மீன் பிடி தொழிலும் மிக சிறப்பாக இருந்தன. மக்கள் செழிப்பாக வாழ்ந்த காலகட்டம் அது.
தொடங்கியது சோமாலிய இராணுவ கிளர்ச்சி (1969):
தனது இராணுவ கிளர்ச்சி மூலம் சோமாலியாவின் மக்களாட்சியை கலைத்துவிட்டு அதிபரானார் " ஜெனரல் அபிதிரஷித் ஷேர்மார்க்".
இவரும் மக்களுக்கான பல நல்ல நல்ல திட்டங்களை கொண்டு வந்து சிறப்பான ஆட்சியை வழங்கினார்.
வெடித்தது எத்தியோப்பியா உடனான போர்:
எத்தியோப்பிய அரசர் அமெரிக்காவின் உதவியை நாடினார். சோமாலிய அதிபர் ரஷியாவின் உதவியை நாடினார். அப்போதோதுதான் வல்லரசுகள் அவர்களின் பனிப்போரை தொடங்கினர்.
அமெரிக்கா, மற்றும் ரஷியாவின் பனிப்போருக்கு இரையான சோமாலிய பொருளாதாரம்:
சோமாலியாவுக்கு ஆதரவாக ரஷியாவும், எத்தியோப்பியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவுக்கு, செயல்பட்டன. அவ்விரு வல்லரசு நாடுகளும் தங்களின் ஆதரவு நாடுகளுக்கு நிறைய ஆயுத உதவிகளை வாரி வழங்கின.
அந்த மிக பெரிய வல்லரசு நாடுகளின் பனிப்போருக்கு சோமாலியாவும், எத்தியோப்பியாவும் இறையாகின. அதிலும், இவற்றில் அதிகமாக பாதிக்கப்பட்டது சோமாலியாவின் பொருளாதாரமே.
அப்போது எத்தியோப்பிய மன்னர் ரஷ்யாவால் கொல்லப்படுகிறார். முழு எத்தியோப்பியாவும் ரஷ்யா கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.
இதனை பயன்படுத்தி சோமாலியா எத்தியோப்பியாவை அடைய நினைக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது சோமாலியாவின் நண்பனான ரஷியா. அவ்வளவுதான் அவர்களின் நட்பு பகையாக மாறுகிறது.
பிறகு, நிலைமை தலைகீழாகிறது. அதுவரை சோமாலியாவின் நண்பனாக இருந்த ரஷ்யா எத்தியோப்பியாவில் நண்பனாகவும், எத்தியோப்பியாவின் நண்பனாக இருந்த அமேரிக்கா சோமாலியாவுக்கு ஆதரவாகவும் மாறுகிறார்கள்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நட்டு பெரு நிறுவனங்களின் ஆதிக்கம்:
அப்போதைய சோமாலிய அதிபர் அமெரிக்காவின் கைபொம்மையாக மாறுகிறார். இதனை பயன்படுத்தி எண்ணற்ற ஐரோப்பிய நாட்டு நிறுவனங்கள் மீத்தேன், ஹைட்ரொ கார்பன் போன்றவற்றை எடுப்பதாக கூறியும், அதனால் சோமாலியர்களுக்கு நல்ல அவளை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியும் சோமாலியாவிற்குள் நுழைகிறார்கள்.
அப்போதிலிருந்தே சோமாலியாவின் அழிவு ஆரம்பமாகிறது எனலாம்.
நிறைய தொழிற்சாலை கழிவுகள் மேலை நாடுகளால் சோமாலிய கடலில் கொட்டப்பட்டன. சோமாலியாவின் மீன் வளம் சின்னா பின்னமானது.
மீன் வளத்தையும் விட்டு வைக்காத மேற்கத்திய நாட்டு மீன் பிடி நிறுவனங்கள்:
மேற்கத்திய நாடுகளின் மீன் பிடி நிறுவனங்களோ சோமாலிய கடற் பகுதியின் மிச்சம் இருந்த மீன் வளத்தையும் மொத்தமாக வாரி சுருட்டினர். தங்கள் கப்பல்களின் மூலம் சோமாலிய மீன் வளத்தை மொத்தமாக அழித்தனர்.
சுனாமியால் உலகிற்க்கு வெளிச்சத்துக்கு வந்த மேற்கத்திய நாடுகளின் சுயநலம்:
அப்போதுதான் சோமாலியா கடற்கரையையும் அதனை சுற்றிய நாடுகளின் கடற்கரைகளை சுனாமி தாக்கியது. அதன் பிறகு கரை ஒதுங்கிய கடடனர்களால் அந்த துரோகம் வெளிச்சத்துக்கு வந்தது.
ஐ நா சபை அதிர்ச்சியில் உறைந்தது. அதன் பிறகு தங்கள் சோமாலிய கடற் பகுதியை காப்பாற்ற சோமாலிய மீனவர்கள் புரட்சி படையாக மாறி கையில் ஆயுதம் எடுத்தனர்.
சோமாலியா கடற் கொள்ளையர்களின் தொடக்கம்:
சோமாலிய கடற் கொள்ளையர்கள் என்று தற்காலத்தில் அழைக்கப்படுபவர்கள் தொடக்க காலத்தில் அந்நாட்டு மீனவர்கள் என்பதை நான் இந்த வலை பதிவின் மூலம் தெரிவிக்கிறேன்.
அவர்கள் தங்கள் நாடு மீன் வளத்தின் மிச்சத்தையாவது காப்பாற்ற ஆயுதம் எடுத்தவர்கள். பிறகு அந்த வழியாக வரும் கப்பல்களை வழி மறைத்து கடத்த தொடங்கினார்கள்.
கதத்தப்பட்ட கப்பல்களை விடுதலை செய்ய அந்த கப்பல் நிறுவனங்களிடமிருந்து 10 மில்லியன் டாலர்கள் வரை பெற்றனர். இதனை வழக்கமாக தற்போது வரை செய்து வருகின்றனர்.
மாபெரும் பஞ்சத்திற்கான காரணம்:
இதன் காரணமாக தனது அண்டை நாடுகளுக்கு உணவளித்து வந்த சோமாலியா ஒரு வேளை உணவுக்கு அண்டை நாடுகளிடமும், மற்ற மேலை நாடுகளிடமும் கையேந்தும் நிலை ஏற்பட்டது.
இதுவே தொடக்க காலத்தில் மிகவும் செல்வ செழிப்புடன் இருந்த சோமாலியா மற்ற மேலை நாடுகளால் பெரும் பஞ்சத்தில் சிக்கி மிக பெரிய கொடூர நோய்களுக்கும் ஆளானதன் வரலாற்று கதைதான் இது.
நண்பர்களே இந்த வலைப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களின் கருக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் இடவும்.
நன்றி! வணக்கம்!! வாழ்க தமிழ்!!..
கருத்துகள்
கருத்துரையிடுக
இனிய தமிழ் உடல்பிறப்புகளே!! எனது வலைப்பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எனது வலைப்பதிப்பு தொடர்பான உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.