உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ரமிக்கவே முடியாத 10 நாடுகள்

உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஆக்ரமிக்கவே முடியாத 10 நாடுகள்


உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆக்ரமிக்கவே முடியாத 10 நாடுகள். இந்த தலைப்பை பற்றிதான் நாம் இந்த வலைப்பதிவில் விரிவாக பார்க்கப் போகிறோம். 


ஏற்கனவே உலக நாடுகள் சென்ற நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களை பார்த்துவிட்டது. உலகப் போரால் ஏற்பட்ட பின்விளைவுகள் என்னவென்று அனைவரும் அறிவர். 


இந்நிலையில் உலக நாடுகள் தங்களுக்குள் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தயாரித்து அதில் கையொப்பமிட்டு உள்ளார்கள். ஆகையால் தான் மீண்டும் மூன்றாவது உலகப் போர் வராமல் அது தடுக்கிறது.


இருப்பினும் சில மேலை நாடுகளின் சுயநலத்தால் மீண்டும் உலகப் போருக்கு அது வித்திடுமோ என்று மிகவும் அச்சமாக உள்ளது. 


ஒவ்வொரு பெரிய இராணுவத்தை கொண்டிருக்கும் நாடுகளும் தங்களின் வலிமையை உலகிற்கு காட்ட பல அணு ஆயுத சொத்தைகளையும், பல ஏவுகணை சோதனைகளையும் 1950ம் ஆண்டிற்கு பிந்தைய காலத்திலிருந்து செய்து வருகின்றன. 


அனால் தற்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்த்தல் உக்ரைன் ரஷ்யா போர் மீண்டும் ஒரு உலகப் போருக்கு வழி செய்கிறதோ என அஞ்ச தோன்றுகிறது. 


இதன் அடிப்படையில் உலகின் மிக சக்தி வாய்ந்த மற்றும் ஆக்கிரமிக்க முடியாத நாடுகள் எனும் தலைப்பை இனி விரிவாக காணலாம். 


1. அமெரிக்கா:


அமெரிக்கா

அமெரிக்கா உலகின் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இராணுவ தண்டவாளங்களில் மட்டுமின்றி, விண்வெளி, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், தொழில் முன்னேற்றம், உலகின் சக்திவாய்ந்த முதல் தர நிறுவனங்களான கூகிள், ஆப்பிள், மைக்ரோ சாஃப்ட், அமேசான், டெஸ்லா, வால்மார்ட், முகநூல் (Facebook) என உலகை ஆளும் பல நிறுவனங்கள் இந்நாட்டிற்கு பக்க பலமாக உள்ளது. 

ரஷ்யாவிற்கு பரம எதிரியான அமெரிக்கா, நேட்டோ அமைப்பின் உருவாக்கம் மற்றும் விரிவாக்கத்திற்கு பிறகு மாபெரும் ஜாம்பவானாக மேலோங்கி நிற்கிறது. 


உலகின் சக்தி வாய்ந்த இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தர வரிசை பட்டியலிலும் அமெரிக்காவிற்கே முதலிடம். 



2. ரஷ்யா:


ரஷ்யா

ரஷ்யா உலகின் இரண்டாவது சக்தி வாய்ந்த நாடாக கருதப்படுகிறது. இன்று நேற்று என்றில்லாமல் உலகப் போர் காலகட்டதிலிருந்தே அமெரிக்காவின் இணையான போட்டியாளர் ரஷ்யா தான். 

இராணுவ தண்டவாளங்கள் விற்பதில் ரஷ்யா முன்னோடியாக திகழ்கிறது. இராணுவ தொழில்நுட்பத்திலும் ரஷ்யா மிகப்பெரும் ஜாம்பவானாகவும், ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் போட்டியாளராகவும் திகழ்கிறது. 


ரஷ்யாவிடம் எண்ணெய் வளமும் இயற்க்கை எரிவாய்வும் அதிகம் உள்ளதால் இந்நாடு உக்ரைனுடனான போருக்கு முன்னர் வரை பல ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணையை விற்று வந்தது. இவ்வளவு ஏன் நமது இந்தியாவும் தற்போது ரஷ்யாவிடமே எண்ணெய் வாங்க தொடங்கியுள்ளது. 


ரஷ்யா இந்தியாவின் உற்ற தோழன் என்பதை உலகறியும். 


ரஷ்யா அதிபர் புடினின் கோபத்தால் அந்நாடு இவ்வளவு பொருளாதார தடைகளை தொழில் சுமந்து வருகிறது. எனினும் ரஷ்யா ஒரு மிகப்பெரிய சக்திவாய்ந்த நாடு என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. 



3. சீனா 


சீனா

சீனா உலகளவில் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு அடுத்த இடமான இரண்டாவது இடம் சீனாவிற்கு தான். 

உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி, தொழிற்நுட்பம் என சீனா வளர்ந்த மாபெரும் வல்லரசாக உள்ளது. இவை அனைத்திற்கும் பின் இருப்பது சீனர்களின் கடும் உழைப்பே. 


அது மட்டுமின்றி சீனா மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சீனாவின் பொருளாதாரம் இந்திய பொருளாதாரத்தை விட நான்கு மடங்கு பெரியது. 


4. இந்தியா:


இந்தியா


இந்தியா ஒரு மத சார்பற்ற, ஒற்றுமையான மற்றும் உலகின் நான்காவது சக்தி வாய்ந்த நாடு. பொருளாதாரத்திலும் இந்தியா மிக வேகமான வளர்ச்சியை கண்டுள்ளது. 


இராணுவத் தண்டவாளங்களை இந்தியா 60% அளவுக்கு ரஷ்யாவிடமே வாங்குகிறது. ரஷ்யாவின் நீண்டகால உற்ற தோழன். அதுமட்டுமல்ல மற்ற உலக நாடுளிடமும் தனது நட்பை உறுதியாக வைத்துக்கொண்டு உலகின் பெரும்பாலான நாடுகளின் நண்பனாக உள்ளது. 


பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்து வந்தது. அதனை இந்தியா மிக எளிதாக வெற்றியும் கண்டது. 


தற்போது சீனா நமக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக இருப்பினும் அத்தனையும் எளிதில் சமாளிக்கிறது. 


தொழில்நுட்பம், இராணுவ பலம், பொருளாதாரம், உள்நாட்டு உற்பத்தி, ஏற்றுமதி ஆகிய துறைகளில் சிறப்பாக உள்ள இந்தியா இன்னும் சில ஆண்டுகளில் வல்லரசு ஆகும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. 


5. ஜப்பான்:


ஜப்பான்

ஜப்பான் உலகின் 5வது சக்திவாய்ந்த நாடு. இரண்டு அணுகுண்டுகளை தனது முதுகில் தாங்கிய குட்டி தீவு நாடு.  அமெரிக்காவால் 1945ஆம் ஆண்டு அனுதாக்குதலுக்கு ஆளாகி அடுத்த 50 ஆண்டுகளில் வளர்ந்து நிற்கிறது. 

ஜப்பான் இராணுவத்தின் எண்ணிக்கை மிக குறைவு ஆனால் மிகவும் வீரியமான இராணுவம் ஜப்பானுடையது. 


தொழில்நுட்பம், இசைக்க மற்றும் நான்கு சக்கர உலகை ஆட்டிப் படைக்கும் ஹ்யுண்டாய், ஹோண்டா, நிசான், போன்ற முன்னணி நிறுவனங்களின் தாய் நாடு தான் ஜப்பான். 


உணவு உற்பத்தியை சமாளிக்க கப்பலில் விவசாயம் செய்யும் நாடு என்னும் புகழ் பெற்றது ஜப்பான். 



6. தென் கொரியா:


தென் கொரியா


தென் கொரியா உலகின் 6வது சக்திவாய்ந்த நாடு. சாம்சங் (சாம்சங்) நிறுவனத்தின் பிறப்பிடம். இராணுவத்திலும், தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக கருதப்படுகிறது. 


தென் கொரியா தனது வருவாயில் பெரும் பங்கை இராணுவம், தொழில்நுட்பம், கல்வி, தொழில் கட்டமைப்பு ஆகிய முக்கிய துறைகளில் செலவிடுகிறது. 


வாடா கொரியாவின் பரம எதிரி தான் இந்த தென் கொரியா. இதன் காரணமாகவே தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரித்து வருகிறது  தென் கொரியா. 


7. பிரான்ஸ்:


பிரான்ஸ்

பிரான்ஸ் மேற்கு ஐரோப்பியாவில் மிகப் பெரிய நாடு. இது நேட்டோ நாடுகள் அமைப்பில் ஒரு அங்கமாகவும் அமெரிக்காவின் நட்பு நாடாகவும் உள்ளது. 

சென்ற நூற்றாண்டுகளில் பிரான்ஸ் நமது இந்தியாவின் பாண்டிச்சேரி, கோவா, டையூ, டாமன், ஆகிய உணின் பிரதேசங்களை ஆண்ட நாடு. பிரிட்டனின் ஆதிகால எதிரி. இன்றைய நண்பன். 


பிரான்ஸ் பொருளாதாரம், தொழில்நுட்பம், உள்நாட்டு உற்பத்தி, ஜவுளி, எந்திர தயாரிப்பு, வாகன தயாரிப்பு ஆகிய துறைகளில் கொடிகட்டி பறக்கும் ஐரோப்பிய நாடு. பிரான்ஸ் இத்தாலி மற்றும் ஸ்பெயினுடன் தனது எல்லையை பகிர்கிறது. 


ஈபிள் லவர் பிரான்ஸின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. 


8. இங்கிலாந்து: (பிரிட்டன்)


இங்கிலாந்து


இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளை ஆண்ட பெருமை கொண்ட நாடு. முதல் உலகப்போர் வரை இதன் ஆதிக்கம் உலகெங்கும் இருந்தது. பிறகு பிற நாடுகள் இந்நாட்டை பின்னுக்கு தள்ளி முன்னேறிவிட்டன. 


இங்கிலாந்து "யூனிடேட் கிங்டம்" என அழைக்கப்படுகிறது. 


தொழில்நுட்பத்தில் மேலோங்கிய நாடாகவும், பொருளாதாரத்தில் உயர் தரத்திலும் உள்ளது. அமெரிக்காவின் இன்றைய சிறந்த கூட்டாளி பிரிட்டன் தான். 


நேட்டோ அமைப்பில் முக்கிய நாடக திகழ்கிறது. 


9. ஜெர்மனி:


ஜெர்மனி

ஜெர்மனி பொருளாதாரத்தில் ஐரோப்பாவின் மிகப்பெரிய நாடு. நேட்டோ நாடுகள் பட்டியலில் முக்கிய இடம் பெறுகிறது ஜெர்மனி. இதன் ஆறுகளின் வாயிலாக நிறைய லாபம் ஈட்டும் நாடு. 

ஃபோர்ட் நிறுவனத்தின் பிறப்பிடம். 


உள்நாட்டு உற்பத்தி, பொருளாதாரம், வாகன உற்பத்தி, சாலை வசதி, உயர் ரக தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேலோங்கி நிற்கிறது ஜெர்மனி. 


ஜெர்மனி ரஷ்யாவின் பழைய எதிரி ஆகும் என்பது யாவரும் அறிந்ததே. 



10. துருக்கி:


துருக்கி

துருக்கி உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் பட்டியலில் 10வது இடத்தை பிடிக்கிறது. 

துருக்கி ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கு ஒரு பாலமாக உள்ளது. இது நேட்டோ அமைப்பின் முக்கியமான நாடக கருதப்படுகிறது. துருக்கியின் 

இராணுவம்தான் நாடோவில் அமெரிக்கா படைக்கு அடுத்து உள்ள மிகப்பெரிய படை ஆகும். 


ஐரோப்பியாவுக்குள் புகுற வேண்டும் என நினைக்கும் ஆசியா மக்கள் துருக்கி வழியாகத்தான் ஐரோப்பியாவிக்குள் புகுகிறார்கள். இதுவே துர்கியின் பலம் மற்றும் பலவீனம். 



நண்பர்களே இந்த வலைப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். எங்கள் வலைப்பதிவுகளை உடனுக்கு உடன் பெற எங்கள் டெலிக்ராம சேனலை பதிவு செய்யுங்கள். (Subscribe our Telegram Channel). 


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்