புற்றுநோய்க்கு காரணமான 10 உணவுகள்

10-foods-which-cause-cancer

நாம் அன்றாடம் பயன்படுத்தும், நமது குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுப் பொருட்கள் விஷம் என்பதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா?


ஆம் அது தான் உண்மை. இதனை நாம் ஏற்று கொண்டே ஆகா வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 


உலகளவில் ஆண்டுக்கு சுமார் 2 கோடி பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தான் ஆதியான மற்றும் கசப்பான உண்மை. 


புற்றுநோய் பற்றி உங்களுக்கு நிறைய தெரிந்திருக்கும் என நம்புகிறேன். ஒரு வேளை தெரியவில்லை என்றால், தயவு செய்து இணையத்தில் அதன் தாக்கங்களையும், புற்றுநோய் வந்தவர்கள் படும் கஷ்டங்களை பற்றியும் தேடி பாருங்கள். 


புற்றுநோய் என்பது எப்படிப்பட்ட கொடுமையான நோய் என அறிவீர்கள். 


அந்த கொடூர புற்று நோயை உண்டாக்கும் 10 உணவுகளை பற்றி தான் இந்த வளைப் பதிவில் நான் விவரிக்கப் போகிறேன். 


1. மைக்ரோ வேவ் ஓவெனில் தயாரிக்கப்படும் சோளப்பொரி (பாப்கார்ன்):


microvawe-popcorn-cause-cancer


நாம் திரை அரங்குகளுக்கு  செல்லும்போது நாம் மிக ஆர்வமாக வாங்கி உட்கொள்ளும் சிற்றுண்டி தான் சோளப்பொரி (பாப்கார்ன்). அந்த சோளப்பொறியை மைக்ரோ வேவ் ஓவெனில் தயாரிக்கும்போது சேர்க்கப்படும் வெண்ணை ரசாயனம் போன்று மாறுகிறது அந்த முறையில் சமைக்கும்பொது. 


இந்த முறையில் சமைக்கப்பட்ட சோளப்பொறியை நாம் தொடர்ந்து  உண்ணும்போது புற்று நோய் ஏற்படுகிறது. 


2. பதப்படுத்தப்பட்டு பிளாஸ்டிக் கலன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் உணவுப் பொருட்கள்:


preservative-canned-food


பிளாஸ்டிக் கலன்களிலும், மற்ற பாக்கெட்டுகளிலும் அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்று நோய் உருவாகிறது என பல சர்வதேச ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


அவ்வாறு பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் ரசாயனங்களால் நமது உடலில் புதிய புற்று நோய் செல்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் புற்று நோய் செல் மற்ற செல்களையும் பாதிக்கிறது. 


3. கடைகளில் விற்கப்படும் தறமற்ற ஊறுகாய் வகைகள்:


pickle-causing-cancer



ஊறுகாய் வகைகளில் சேர்க்கப்படும் அதிகப்படியான உப்பு அந்த ஊறுகாயுடன் வினை புரிந்து சில நாட்களில்  ரசாயனமாக மாறுகிறது. 


ஊறுகாயை நாம் தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும்போது புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது மட்டுமின்றி பலருக்கு ரத்த அழுத்த நோய் (blood pressure) ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. 


எனவே நாம் எப்போதும் ஊறுகாயை அளவாக உட்கொள்வது நல்லது. 


4. பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகள்:


preservative-meat-causing-cancer


டின்களிலும், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில், அடைக்கப்பட்டு விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை கெடாமல் இறுப்பதற்காக அவற்றில் மோசமான ரசாயனங்களை சேர்க்கின்றனர். 


இதன் ருசிக்கு அடிமையாகி பலர் அதிக அளவில் உட்கொள்கிறார்கள். இதுவே பிற்காலங்களில் அவர்களுக்கு தெரியாமல் மெல்ல மெல்ல புற்றுநோயாக மாறுகிறது. 


இறைச்சியை நாம் எப்போதும் இறைச்சி கடைகளில் மட்டுமே வாங்கி உட்கொள்ள வேண்டும். 


5. வெள்ளை சர்க்கரை:


white-sugar-causing-cancer


வெள்ளை சர்கரையையே நம்மில் பலர் உணவிலும், இனிப்பு வகைகளிலும், தேநீர், மற்றும் காப்பி, பழச்சாறு, போன்றவற்றில் கலந்து உட்கொண்டு வருகிறோம். 


இந்த வெள்ளை சர்க்கரையை தயாரிப்பதற்கு முன் பிரவுன் நிற சர்க்கரையாக தான் இருக்கும். ஆனால், அதை ஆலைகள் தயாரிக்கும்போது வெள்ளை நிறத்திற்காக அதனை பல்வேறு ரசாயனங்கள் மூலம் சலவை செய்கின்றனர். 


இவ்வாறு சலவை செய்யப்பட்டு விற்கப்படும் வெள்ளை சர்க்கரையானது பின்னாளில் அதனை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும்.


6. ரசாயன பூச்சிக் கொல்லிகளால் விளைவிக்கப்படும் வெள்ளை அரிசி, காய்கறிகள் மற்றும் பழங்கள்:


fertilized-vegetables-causing-cancer


கடந்த 20 ஆண்டுகளாக நமது நாட்டில் இயற்கை உரங்களை பயன்படுத்துவது மாறி ரசாயன உரங்களை பயன்படுத்தி அரிசி, கோதுமை, காய்கறிகள் மற்றும் பழங்களை விளைவிக்கின்றன. 


அவற்றிலுள்ள ரசாயனங்கள் நமது உணவில் கலந்து புற்று நோய் செல்களை உருவாக்குகிறது. 


எனவே, விலை அதிகமாக இருந்தாலும் சரி சுத்தமான இயற்கை உரங்களில் விளைவிக்கப்பட்ட அரிசி, காய்கறிகள், மற்றும் பழங்களை மட்டுமே உண்பது நல்லது. 


7. நிறமூட்டப்பட்ட சிற்றுண்டிகள்:


coloured-cakes-caused-cancer


பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காக குழைதைகள் சாப்பிடும் பல வகை சிற்றூண்டிகளான கேக், பிஸ்கட், மிட்டாய், ஐஸ் கிரீம் ஆகியவற்றில் ரசாயனம் கலந்த வண்ணங்களை கலக்கின்றன. 


பெற்றோரும் குளங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற விழைந்தாய் வாங்கி சாப்பிட கொடுக்கிறார்கள். 


இது போன்ற நிறமூட்டப்பட்ட உணவுகள் புற்றுநோயை ஏற்படுத்துகின்றன. 


பெற்றோர்கள் தயவு செய்து தங்கள் குழந்தைகளுக்கு சுத்தமான வீட்டில் தயாரிக்கப்பட்ட முறுக்கு, சீடை, வெள்ளம் கலந்த இனிப்புகள், நல்லெண்ணையில் வீட்டில் செய்யப்பட்ட வடை ஆகியவற்றை உண்ணக்கொடுங்கள். 

 

8. மைதா மாவு:


maidha


மைதா மாவு என்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. மைதாவில் செய்யப்படும் பரோட்டா, பிஸ்கட், சமோசா, மற்றும் ரொட்டி போன்றவற்றை உண்பதால் புற்றுநோய் ஏற்படும். 


9. பிராண்டிங் செய்யப்பட கலப்பட எண்ணெய்:


cooking-oil


சமையலுக்கு என்னை வாங்கும்போது நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தொலைக்காட்சி விளம்பரத்தை பார்த்துவிட்டு கலப்பட எண்ணெய் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. 


பெரிய கார்பொரேட் நிறுவனங்களால் விற்கப்படும் சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், பேக் செய்யப்பட்டு விற்கப்படும் போலி கடலெண்ணெய் மிகப்பெரிய விஷம் என்பதை தயவு செய்து உணருங்கள். 


இது போன்ற கலப்பட எண்ணெய்யை உட்கொள்வதால் கண்டிப்பாக புற்று நோய் வரும். 


தயவு செய்து உங்கள் வீட்டிற்கு அருகில் கிடைக்கும் செக்கு கடலெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற சுத்தமான எண்ணெய் வகைகளை மட்டுமே வாங்கி உட்கொள்ளுங்கள். 


10. குளிர்பானம் மற்றும் சோடா:


soft-drink



பிரபல மேற்கத்திய நாடு நிறுவனங்களின் குளிர்பானங்களால், அதனை நீண்ட காலங்களுக்கு உட்கொள்ளுவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதை நீங்கள் உணர வேண்டும். 



என் இனிய உடன் பிறப்புகளே இந்த வலைப்பதிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். 


இவ்வலைப்பதிவு தொடர்பான உங்களது கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


நன்றி வணக்கம்!! வாழ்க தமிழ்!! 


கருத்துகள்