உலகின் 3 மோசமான ஊதாரி அதிபர்கள்
இந்த பதிவில் நான் விவரிக்கப்போகும் தலைப்பு " உலகின் 5 மோசமான ஊதாரி அதிபர்கள் ".
இந்த 2022 ஆம் ஆண்டின் மோசமான 5 ஊதாரி தலைவர்களை பற்றி தான் நாம் காணப்போகிறோம். மக்களின் வியர்வையையும், உழைப்பையும் உரித்து, அவர்களை ஏமாற்றி, பணியவைத்து ஒரு மோசமான மற்றும் திறமையற்ற தலைவர்களை தோலுரித்து காட்டப்போகிறேன்.
இவர்களுக்கு நாடாளும் திறமை இல்லை, தைரியம் இல்லை, வாழ்வின் கஷ்டமே பாராமல் சொகுசாக இருப்பவர்கள்.
இவர்கள் யார் யார் என்ற விவரங்களை காணலாம்!!
1. வட கொரியா அதிபர் கிங் ஜொங்-உன்:
இவர் மறைந்த முன்னாள் வட கொரியா அதிபர் கிம் ஜொங்-இல் அவர்களுடைய மூன்றாவது மகன்.
இவர் பிறந்தது வட கொரியா வாக இருந்தாலும் படித்ததெல்லாம் அமெரிக்காவில் தான்.
இவரது தந்தை ஒரு சர்வாதிகாரி. அவரை போல் இவரும் ஒரு மோசமான சர்வாதிகாரி. இறக்க குணம் என்பதே இவருக்கு கிடையாது.
தேவை இல்லாத பல தமாஷான சட்டங்கள் இவரால் அந்நாட்டில் அமலில் உள்ளது. அவற்றை பற்றி கூடிய விரைவில் தனி வலை பதிவு ஒன்றை இடுகிறேன்.
பொழுதுபோக்கு தடை, சமூக வலை தளங்கள் தடை, ஆண்கள் முடி வெட்டுவதில் கட்டுப்பாடுகள், நிர்வாக திறமையின்மை, மற்றும் பல பைத்தியக்கார தனமான பல சேட்டைகளுக்கு வல்லவர் இந்த கிம் ஜோங்-யூன்.
பசி பட்டினியால் வாடி வதங்கும் நாட்டு மக்களில் வட கொரியா மக்கள் மிகவும் பாவப்பட்டவர்கள்.
2. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச:
கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் தற்போதய அதிபர் ஆவார். இவர் முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச வின் சகோதரர்.
மஹிந்த ராஜபக்ச தற்போது இலங்கையின் பிரதமராக உள்ளார்.
இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட பல்வேறு பொறுப்பற்ற முடிவுகள் தான் இலங்கையின் தற்போதய மாபெரும் பஞ்சத்திற்கு காரணம்.
ஏற்கனவே சீனாவிடம் வாங்கிய கடனுக்கு வட்டி கூட கட்ட முடியாமல் ஹம்பன்தோட்டா துறைமுகத்தை சீனா விடம் ஏற்கனவே 99 வருடத்திற்கு தாரை வார்த்துவிட்டார்கள்.
தற்போது நாட்டிற்கு கச்சா என்னை கூட வாங்க முடியாமல் இந்தியாவிடமும், மீண்டும் சீனாவிடமும் காய் ஏந்துகிறார்கள்.
இலங்கையின் உடன் பிறப்புக்கள் அத்யாவசிய உணவு பொருட்களை வாங்க கூட கையில் பணமில்லாமல் பட்டினியில் தவிப்பதை நீங்களும் தொலைக்காட்சிகளில் கண்டு இருப்பீர்கள்.
இதே நிலையில் போனால் என்ன ஆகுமோ!! அந்த கடவுள் தான் அவர்களை காப்பாற்ற வேண்டும்.
3. ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி
அஷ்ரப் கனி ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர். தலிபான்கள் காபூலை சென்ற ஆண்டு பிடித்த போது பயந்து போய் துண்டை காணோம் துணியை காணோம் என்று வேறு நாட்டிற்கு பேட்டி நிறைய பணத்தோடு ஓடியவர்.
உலகின் தொடை நடுங்கி அதிபர் என பெயர் வாங்கியவர்.
இவரது அமெரிக்க சார்பு நடவடிக்கைகள் மற்றும் சரியான திட்டமிடல் இன்மையாலும் மற்றும் முழுக்க முழுக்க பாதுகாப்பில் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை நம்பி இருந்ததால் இப்படி ஒரு அவ பெயர் இவருக்கு கிடைத்தது எனலாம்.
தற்போதைய ஆப்கானிஸ்தானின் மக்கள் கதியோ மிகவும் கேள்விக்குறியாக உள்ளது.
உன்ன உணவில்லாமல் பிற நாடுகளின் எந்த உதவியுமின்றி அந்த நாடு பயங்கரவாத அமைப்புகளில் ஒன்றான தாலிபான்களிடம் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறது.
பெண் அடிமைத்தனம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, பேச்சுரிமை, மற்றும் இதர உரிமைகளையும் தலிபான்கள் பறித்துவிட்டனர்.
நண்பர்களே எனது இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ள தகவல்களை அளித்திருக்கும் என்று நம்புகிறேன். இது பற்றிய உங்களது கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.
உங்களது பொன்னான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி!!
கருத்துகள்
கருத்துரையிடுக
இனிய தமிழ் உடல்பிறப்புகளே!! எனது வலைப்பகுதிக்கு உங்களை வரவேற்கிறேன். எனது வலைப்பதிப்பு தொடர்பான உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.